search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சட்டத்திருத்த மசோதா"

    இந்தியாவில் தனிநபர் சட்டத்தின்கீழ் விவாகரத்து கோரும் சட்டவிதியில் இருந்து தொழுநோய் பாதிப்பை நீக்கும் சட்டத்திருத்த மசோதா இன்று பாராளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. #PersonalLawsAmendmentBill #LokSabha
    புதுடெல்லி:

    மலட்டுத்தன்மை, தீராத நோய் பாதிப்பு ஆகியவற்றை காரணம்காட்டி கணவனோ, மனைவியோ விவாகரத்து கோரும் முறை நமது நாட்டில் நடைமுறையில் உள்ளது.



    இந்த தீராத நோய்கள் பட்டியலில் இருந்து தொழுநோய் பாதிப்பை நீக்க இந்திய தனிநபர் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய மந்திரிசபை கடந்த ஆண்டு தீர்மானித்தது.

    இந்நிலையில், தனிநபர் சட்டத்தின்கீழ் விவாகரத்து கோரும் சட்டவிதியில் இருந்து தொழுநோய் பாதிப்பை நீக்கும் சட்டத்திருத்தம் பாராளுமன்ற மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. #PersonalLawsAmendmentBill #LokSabha
    உள்ளாட்சி அமைப்புகளில் தனி அலுவலர்கள் பதவிக்காலம் நீட்டிப்பு தொடர்பான சட்டத்திருத்த மசோதா, தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது. #TNLocalBodies #TNSpecialOfficers
    சென்னை:

    உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிவடைந்த பிறகும், தேர்தல் நடத்தப்படாததால் உள்ளாட்சிகளை நிர்வகிப்பதற்காக தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். வார்டு வரையறை தொடர்பான பணிகள் முடிவடையாததால் தேர்தல் தொடர்ந்து தாமதம் ஆகிவருகிறது. இதனால் தனி அலுவலர்களின் பதவிக்காலமும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தனி அலுவலர்களின் பதவிக்காலம் நாளை மறுநாளுடன் முடிவடைய உள்ளது. எனவே, அவர்களின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா, சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.  மசோதாவை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்தார். அதில், வார்டு வரையறை பணிகள் இன்னும் முடிவடையாததால், பதவிக்காலம்  நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

    அப்போது, சட்டத் திருத்தத்திற்கு தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.  எனினும் சபையில் பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவு இருந்ததால், குரல் வாக்கெடுப்பின் மூலம் இந்த சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

    இதன்மூலம் உள்ளாட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலம் 4-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #TNLocalBodies #TNSpecialOfficers
    ×